உள்ளூர் செய்திகள்

அரசு கலை கல்லுாரிகள் திறப்பு தேதியில் மாற்றம்

உடுமலை: அரசுக்கல்லுாரிகள் வரும் ஜூலை 3ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்பட்டது. மறுநாள் (9 ம் தேதி) அரசு கல்லுாரிகளில் இளங்கலை பட்டபடிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வெளியிடப்பட்டது.அதன்படி மாவட்டத்தில் உடுமலை உட்பட அரசு கல்லுாரிகளில் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவருக்கு தரவரிசை பட்டியல், மே இரண்டாவது வாரம் வெளியிடப்பட்டது. கவுன்சிலிங் பணிகள் நிறைவுற்று, ஜூன் 22 ம் தேதி அரசு கல்லுாரிகள் துவங்கப்படும்; முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் என உயர்கல்வித்துறை அறிவித்தது.அவ்வகையில், மே கடைசி வாரம் துவங்கி ஜூன் இறுதி வரை இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடந்தது. அதில் 80 சதவீத மாணவ, மாணவியருக்கு சேர்க்கை உறுதி செய்யப்பட்டு, இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு இம்மாத இறுதிக்குள் கலந்தாய்வு நடக்கவுள்ளது. இந்நிலையில், உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில், அரசு கல்லுாரிகளில் மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஜூன் 30ம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்கவுள்ளதால், கல்லுாரிகள் ஜூலை 3ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்