உள்ளூர் செய்திகள்

இன்ஜி., மாணவர் சேர்க்கை தரவரிசை இன்று வெளியீடு

அண்ணா பல்கலை இணைப்பில் இருக்கும், 440 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க 1.88 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு, கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. கவுன்சிலிங் கமிட்டியின் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை விபரத்தை இன்று தெரிந்து கொள்ளலாம். தரவரிசையில் ஆட்சேபனை இருந்தால், தகவல் அளித்து மாணவர்கள் தீர்வு காண இன்று முதல் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. ஜூலை 2ல் கவுன்சிலிங் துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்