உள்ளூர் செய்திகள்

கிடப்பில் பல் மருத்துவக்கல்லுாரி முன்னாள் அமைச்சர் பேட்டி

விருதுநகர்: அரசு கல்லூரியே இல்லாத மாவட்டமாக விருதுநகர் சட்டசபை தொகுதி உள்ளது என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.விருதுநகரில் எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்ற ஆண்டு விழா, முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அன்னதானம், உறுப்பினர் சேர்க்கை நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது: ஒன்றரை கோடியாக இருந்த அ.தி.மு.க., தொண்டர்கள் எண்ணிக்கை தற்போது 2 கோடியாக உயர்ந்துள்ளது. மின் கட்டண உயர்வு என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சரியான நிதிநிலை உறவு இல்லை என்பதை காட்டுகிறது. புதிய நிதியமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும். அரசு கல்லுாரியே இல்லாத மாவட்டமாக விருதுநகர் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டம் என்பதனால் பல் மருத்துவக் கல்லூரி திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். அம்மா உணவகம் மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை தமிழர்களை வைத்து அ.தி.மு.க., அரசியல் செய்தது கிடையாது. சில அரசியல் கட்சிகள் தான் அதை செய்கின்றன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்