அரசு மாதிரி பள்ளி பயிற்சி மையம் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழக கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி களில் படிக்கும் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் சிறந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் வாய்ப்பினை பெறுவதற்காக அரசு மாதிரி பள்ளிகள் துவக்கப்பட்டு வருகிறது.அதன்படி விருதுநகர் மாவட்ட கல்வித்துறை சார்பில் கிருஷ்ணன்கோவில் தனியார் கல்லூரியில், அரசு மாதிரி பள்ளி உண்டு உறைவிட பயிற்சி மையம் துவக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன், தென்காசி எம்.பி. தனுஷ் குமார் பயிற்சி மையத்தினை திறந்து வைத்தனர். விழாவில் முதன்மை கல்வி அலுவலர் ராமன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், மாதிரி பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணி உட்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.