மாணவர்களை வெயிலில் நிறுத்த வேண்டாம்; கவர்னர் உத்தரவு
புதுச்சேரி: மாணவர்களை வெயிலில் நிறுத்தி வரவேற்பு அளிக்க வேண்டாம் என, கவர்னர் தமிழிசை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற மாணவர் தின விழா தொடங்குவது சற்று கால தாமதம் ஆனதால், வரவேற்பு அளிப்பதற்காக நிறுத்தப்பட்ட மாணவர்களில் சிலர் மயங்கி விழுந்தது வருத்தமடையச் செய்துள்ளது. நிகழ்ச்சி தொடங்க காலதாமதம் ஆனதற்கு சில நடைமுறை சிக்கல்களே காரணம். இனிமேல் இத்தகைய அரசு விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளில் இது போன்ற அசவுகரியங்கள் நிகழாமல் இருக்க மாணவர்களை வெயிலில் நிறுத்தி வரவேற்பு அளிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.மேலும், நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றால் மட்டும் போதுமானது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.