உள்ளூர் செய்திகள்

புதிய கண்டுபிடிப்புகளை பதிவு செய்யுங்கள்: சி.எல்.ஆர்.ஐ., அழைப்பு

அதில், சி.எஸ்.ஐ.ஆர்., சி.எல்.ஆர்.ஐ., ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் ஹபீப் ஹுசைன் பேசுகையில், தொழில்களுக்கு காப்புரிமை அவசியம். தற்போது, மத்திய அரசு காப்புரிமை தொடர்பாக அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதனால் தொழில்களுக்கு அதிக பயன்கள் கிடைக்கின்றன. இது, வரவேற்கக் கூடியது, என்றார்.பின், சி.எல்.ஆர்.ஐ., இயக்குனர் கே.ஜே.ஸ்ரீராம் கூறியதாவது:மத்திய அரசு, அறிவியல் துறையின் பங்கு என்ன என்பதை, சாதாரண மனிதரும் தெரிந்து கொள்வதற்காக, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. மத்திய அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் இயங்கும், சி.எல்.ஆர்.ஐ., உட்பட, 37 ஆய்வகங்களிலும், ஒரு வாரம், ஒரு ஆய்வகம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில், அந்த ஆய்வகத்தால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் குறித்து தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள், இளைஞர்கள் தங்களின் புதிய கண்டுபிடிப்பு எதுவாக இருந்தாலும், http://Innovateindia.mygov.in/csir-societal-platform என்ற தளத்தில் பதிவிடலாம். அதை, ஆய்வு குழு பரிசீலித்து, முழு ஆய்வுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.தற்போது காப்புரிமை பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. ஒருவரின் காப்புரிமையை மற்றவர் பயன்படுத்த முடியாது. தொழில்களில் சிறந்து விளங்க, காப்புரிமை பதிவு அவசியம் என, இந்திய காப்புரிமை அலுவலகம், இணை கட்டுப்பாட்டாளர் தங்கபாண்டியன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்