மத்திய படை கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலை வளாகம்
பட்டமளிப்பு விழாபல்கலை வேந்தரும், தமிழக கவர்னருமான ரவி, தலைமையில் நடக்கும் விழாவில், முதன்மை விருந்தினராக, ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று, பேருரையாற்ற உள்ளார். இந்த விழாவில், பல்வேறு படிப்புகளில் தங்க பதக்கம் பெற்றவர்கள், டி.லிட்., மற்றும் பிஎச்.டி., தேர்ச்சி பெற்றவர்கள் என, 900 பேர் பட்டம் பெற உள்ளனர். அவர்களில், 100 பேர் மட்டும் விழா அரங்கிலும், மற்றவர்கள் விழா அரங்கம் உள்ள வளாகத்திலும் அனுமதிக்கப்பட உள்ளனர்.பாதுகாப்புபட்டமளிப்பு விழாவையொட்டி, அண்ணா பல்கலை வளாகம், மத்திய பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே, பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர், அண்ணா பல்கலை வளாகத்தின் முந்தைய ஆண்டுகளின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்றிருக்கின்றனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை, தற்போதும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.