சத்துணவு ஊழியர்களுக்கு அரசு பணி விருப்பம் கேட்பு
சிவகங்கை: தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும், என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.தற்போது சமூநலத்துறையில் பதிவுறு எழுத்தர் பணிக்கு 10 ஆண்டு நிறைவு பெற்ற ஆண் சத்துணவு அமைப்பாளர்களிடம் விருப்ப கடிதம் பெற்று அனுப்பும்படி கலெக்டரின் நேர்முக உதவியாளர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. விருப்ப கடிதம் பெற்றவுடன் பணி நியமனம் செய்ய வேண்டும், என சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மலர்விழி, சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர்: ஆண் சத்துணவு அமைப்பாளர்களுக்கு சமூக நலத்துறையில் பதிவுறு எழுத்தர் பணிக்காக விருப்ப கடிதத்துடன் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.மொத்த பணியிடங்களே 17 தான் உள்ளது. சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பெண் சத்துணவு அமைப்பாளர்கள் 300 பேருக்கு கிராம சேவிகா பதவி வழங்கப்படும், என்றார். அதற்கான அரசாணை இன்னும் வெளி வரவில்லை. அனைவருக்கும் பணி நியமனத்திற்கான அரசாணை உடனடியாக வெளியிடப்பட வேண்டும். இது எங்கள் அமைப்பின் நீண்ட கால கோரிக்கையாகும், என்றார்.