ஹாக்கி போட்டி ஒளிபரப்பு அமைச்சர் துவக்கி வைப்பு
செஞ்சி: சென்னையில் நடைபெறும் ஹாக்கி போட்டிகளை மாணவர்கள் பார்ப்பதற்காக நேரடி ஒளிபரப்பை செஞ்சியில் அமைச்சர் துவக்கி வைத்தார்.சென்னையில், 7வது ஆசிய ஆடவர் ஹாக்கி 2023ம் ஆண்டு கோப்பைக்கான போட்டி கடந்த 3ம் சென்னையில் துவங்கியது. 12ம் தேதி வரை நடைபெறும் போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிகளை மாணவர்கள் நேரடியாக கண்பதற்காக செஞ்சியில் தற்காலிக பஸ் நிலையத்தில் எல்.ஈ.டி., பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்தனர். இந்த ஒளிபரப்பை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார், நகர செயலாளர் கார்த்திக் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.