ஓவியப் போட்டியில் வென்ற பள்ளி மாணவருக்கு பாராட்டு
வால்பாறை: மாநில அளவிலான ஓவியப்போட்டியில், 9வது இடத்தை பெற்று வெற்றி பெற்ற மாணவனுக்கு பள்ளி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.வால்பாறை அடுத்துள்ள, வெள்ளமலை எஸ்டேட் அரசு நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளியில், 2ம் வகுப்பு படிக்கும் மாணவன் வெற்றிவேல், மும்பை இந்தியன் டேலன்ட் ஒலிம்பியாட் சார்பில் நடந்த ஓவியப்போட்டியில் கலந்து கொண்டார். போட்டியில், அவர், 9ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவன் வெற்றிவேலுக்கு, எஸ்டேட் மேலாளர் விஜயன், தலைமை ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர், பதக்கம், சான்றிதழ் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கினர்.