உள்ளூர் செய்திகள்

உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் தேர்வு நடக்குமா?

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு இயக்குனரை நியமிக்க அறிவிப்பு வெளியிட்டு, மூன்று மாதங்கள் ஆன நிலையில், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாததால், பேராசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.சென்னை, தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், கடந்த 10 மாதங்களாக இயக்குனர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இதனால், ஆய்வு, பதிப்பு, அறக்கட்டளை சொற்பொழிவு உள்ளிட்ட கல்வியியல் பணிகள் தடைபட்டுள்ளன. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், நிரந்தர இயக்குனர் பணியிடத்தை நிரப்ப, கடந்த மே மாதம், அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, முதல் வகுப்பு முதுகலைப் பட்டத்துடன், பிஎச்.டி., முடித்து, ஆராய்ச்சி மற்றும் கல்வி பணிகளில் ஈடுபட்ட அனுபவம் மிக்க பேராசிரியர்கள், இதற்கு விண்ணப்பித்தனர். ஆனாலும், இதுவரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவில்லை.இதனால், இயக்குனர் தேர்வுக்கான அறிவிப்பு, அரசின் கண்துடைப்பாக இருக்கலாம் என, பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்