அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு காஞ்சியில் தொல்லியல் பயிற்சி
காஞ்சிபுரம்: தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் தொல்லியல் துறை சார்பில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 110 அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில், திருப்பருத்திகுன்றம் திரைலோக்கியநாதர் கோவில்களில் தொல்லியல் துறை பயிற்சிக்காக களப்பயணம் மேற்கொண்டனர்.இக்கோவில்கள் கட்டுமானம் குறித்தும், பல்வேறு வரலாற்று தகவல்களையும், கோவிலில் உள்ள சிற்பக்கலை மற்றும் கல்வெட்டுகள் குறித்தும் காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை ஆய்வாளர் ஸ்ரீதரன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.