உள்ளூர் செய்திகள்

ஹிந்தி தேர்வு கட்டாயம் கமல் கட்சி கண்டனம்

சென்னை: தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு, ஹிந்தி மொழி தேர்வை கட்டாயமாக்கி, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள, பணி நியமன அறிவிப்புக்கு, கமலின் மக்கள் நீதி மையம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.கட்சியின் துணை தலைவர் தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கை:தேசிய தொழில்நுட்ப கழக கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட, 10 கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் அல்லாத அலுவலர் பணி நியமனங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு, சமீபத்தில் தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது. இதில் தேர்வு பெற, ஹிந்தி மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது, மத்திய அரசின் அப்பட்டமான ஹிந்தி திணிப்பு அணுகு முறையாகும்.தமிழகம் உள்ளிட்ட ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு, மத்திய அரசு இழைக்கும் அநீதியால், இந்த மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. இதை மத்திய அரசு உணர மறுக்கிறது. உடனடியாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள, ஹிந்தி திணிப்பு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்