உள்ளூர் செய்திகள்

பத்திரிகை வினியோகஸ்தர் தினம் முதல்வர் நாளை துவக்குகிறார்

துமகூரு: கர்நாடக மாநில பத்திரிகை வினியோகஸ்தர் கட்டமைப்பு மற்றும் துமகூரு மாவட்ட பத்திரிகை வினியோகஸ்தர் சங்கம் சார்பில், மாநில அளவிலான மூன்றாம் ஆண்டு பத்திரிகை வினியோகஸ்தர் தினத்தை முதல்வர் சித்தராமையா நாளை துமகூரில் துவக்குகிறார்.கர்நாடக மாநில பத்திரிகை வினியோகஸ்தர் கட்டமைப்பு மாநிலத் தலைவர் ஷம்புலிங்கா வெளியிட்ட அறிக்கை:மூன்றாம் ஆண்டு பத்திரிகை வினியோகஸ்தர் தினத்தை ஒட்டி, துமகூரில் நாளை காலை 9:00 மணிக்கு டவுன் ஹால் பகுதியில் இருந்து, நிகழ்ச்சி நடக்கும் குப்பி வீரண்ணா கலாஷேத்திரா வரை விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. பேரணியை சித்தர்மலை ஸ்ரீஸ்ரீஸ்ரீ வீரபத்ரா சிவாச்சார்யா சுவாமிகள் தொடக்கிவைக்கிறார். பாவகடா ஸ்ரீராமகிருஷ்ணா சேவாஸ்ரம தலைவர் ஜபானந்தஜீ மஹாராஜ் முன்னிலையில் முதல்வர் சித்தராமையா ஆண்டு விழாவை துவக்கி வைக்கிறார்.பத்திரிகை வினியோகஸ்தர் தொடர்பாக கருத்தரங்கம் நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாம் ஆண்டு பி.யு.சி., பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு, பிரதிபா புரஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.அமைச்சர்கள் பரமேஸ்வர், சந்தோஷ் லாட், ராஜண்ணா, கர்நாடக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை கமிஷனர் ஹேமந்த் நிம்பால்கர், முதல்வர் ஊடக செயலர் பிரபாகர் சிறப்பு விருந்தினர்களாகவும்; எம்.எல்.ஏ.,க்கள் ஜோதி கணேஷ், சீனிவாஸ் சிறப்பு அழைப்பாளர்களாகவும் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்