மாணவர்களுக்கு யோகா, தியானம் அவசியம்: டாக்டர் இந்துஸ்ரீ
தங்கவயல்: உடல் நலம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். மனநலன் கெடாமல் இருக்க, யோகா, தியானம் அவசியம். கெட்ட பழக்கங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று தங்கவயல் தாலுகா மருத்துவ அதிகாரி டாக்டர் இந்துஸ்ரீ வலியுறுத்தினார்.ராபர்ட்சன்பேட்டை சுமதி நகரில் உள்ள மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளியில்,ராஷ்ட்ரிய கிஷோர் ஸ்வஸ்த்யா அபியான்&' திட்டத்தில் மாணவர்களுக்கு உடல் நலம் குறித்து விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியை கோரமண்டல்ஸ்னேகி கிளினிக் சார்பில் நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவ அதிகாரி டாக்டர் இந்துஸ்ரீ பேசியதாவது:இளம் பருவத்தில் உள்ளவர்கள், தங்களின் உடல் நலனைப் பாதுக்க வேண்டும். மனதை கண்டபடி அலையவிடக் கூடாது. அது கெட்ட பழக்கத்துக்கு ஆளாக்கிவிடும். மன நலனும் பாதிக்கும். பலரையும் வெறுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும். மன அழுத்தம் அதிகரிப்பால் தற்கொலைக்கு சிலர் முயற்சிக்கவும் செய்கின்றனர். மனதை புண்படுத்தும் கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட யோகா, தியானம் ஆகியவை மிக அவசியம்.நண்பர்களுடன் குடும்பத்தினருடன் இணைந்து பேச வேண்டும். அப்போது மனதில் இருக்கும் கனம் குறையும். மனம் இளகிவிடும். எனவே டீன் ஏஜ் இளைஞர்கள் மனதை கெட்ட வழிக்கு அலைய பாய விடவேண்டாம்.இவ்வாறு அவர் பேசினார்.இனி நாங்கள் கெட்ட பழக்கங்களில் இருந்து விலகி இருப்போம் என்று மாணவர்கள் சபதம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மொரார்ஜி தேசாய் பள்ளி ஆசிரியர் பாரதி, சுகாதாரத் துறையின் அஸ்வினி, நாகேஷ், மஞ்சுநாத், ரெஜினா உட்பட பலர் பங்கேற்றனர்.