உள்ளூர் செய்திகள்

நிதி பற்றாக்குறை: தாமதமாகும் உயர்கல்வி இணையதள புதுப்பித்தல்

தமிழக உயர்கல்வித் துறையின் முக்கிய அங்கமாக செயல்படுவது, தமிழக உயர்கல்வி மன்றம். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மாநிலம் முழுதும் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்கி, நடப்பு கல்வி ஆண்டில் அவசரமாக அமல்படுத்த, உயர்கல்வி மன்றம் முயற்சி எடுத்தது. ஆனால், கல்லுாரிகள், கல்வியாளர்கள், பேராசிரியர்களின் எதிர்ப்பால், பொது பாடத்திட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில், உயர்கல்வி மன்றத்தின் https://tnsche.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில், 5 ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களே இடம் பெற்றன.இதுகுறித்து, கல்வியாளர்கள் புகார் அளித்ததும், அவசர, அவசரமாக இணையதளத்தின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. 2 மாத இடைவெளியில், மீண்டும் இணைய தளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.அதாவது, அதே பழைய தகவல்களுடன், பழைய பக்கங்களுடன் எந்த மாற்றமும் இல்லாமல் காட்சியளிக்கிறது.இதுகுறித்து விசாரித்த போது, இணையதளத்தை புதுப்பிக்க உயர்கல்வித்துறை சார்பில் உரிய நிதி கிடைக்காததால், புதுப்பிக்கும் பணி தாமதமாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்