உள்ளூர் செய்திகள்

நேரு பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு போட்டி

தர்மபுரி: மறைந்த பிரதமர் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு போட்டி நடக்கிறது என, தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மறைந்த பிரதமர் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு வரும், 8ல், தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை, 9:30 மணி முதல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக, பேச்சுப் போட்டி நடக்க உள்ளது. இதில், பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம் ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடக்கிறது. கல்லுாரி மாணவர்களுக்கு, சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்சசீல கொள்கை, நேருவின வெளியுறவு கொள்கை குறித்து போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக, 5,000, 2ம் பரிசாக, 3,000, 3ம் பரிசாக, 2,000 வழங்கப்பட உள்ளது. எனவே, தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கல்லுாரி கல்வி இணை இயக்குனர் வாயிலாக அனுப்பிய விண்ணப்பத்தில் அந்தந்த கல்லுாரி முதல்வர்களிடமும், பள்ளி மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் அனுமதி பெற்று பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்