உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும்

பந்தலுார்: பந்தலுார் அருகே உப்பட்டி அரசு தொழிற் பயிற்சி மையத்தில், பந்தலுார் நீதிமன்ற சட்ட பணிகள் ஆனைக்குழு சார்பில், மூன்றாம் பாலினத்தவர்களை ஆதரிப்பது மற்றும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மைய முதல்வர் வெங்கடகிருஷ்ணன் வரவேற்றார்.நீதிபதி சிவக்குமார் தலைமை வகித்து பேசுகையில், மூன்றாம் பாலினத்தவர்கள், சமூகத்தில் ஒதுக்கப்படும் நிலை தொடர்கிறது. இதனால், மனதளவில் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே, மாணவர்கள், அவர்களை சாதாரண மனிதர்களை போல் அரவணைத்து செல்ல வேண்டும்.அதேபோல் சமூகத்தை பாழ்படுத்தும் போதை பழக்கங்களில் சிக்கி கொள்ளக்கூடாது. படிக்கும் வயதில் லட்சிய உணர்வுடன் படித்து சாதிக்க வேண்டும் என்றார். வக்கீல்கள் கணேசன், தன்னார்வலர் சிவசுப்ரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் ருக்குமணி ஆகியோர், மாணவர்கள் போதைக்கு அடிமையாகாமல் இருப்பதன் அவசியம் குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்