ஷார்ஜாவில் நடந்து வரும் சர்வதேச புத்தகக் கண்காட்சி
ஷார்ஜா: ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் புத்தக ஆணையத்தின் சார்பில் 42வது சர்வதேச புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. இந்த புத்தகக் கண்காட்சியில் ஆங்கிலம், அரபி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகக் கண்காட்சியை தினமும் பொதுமக்கள் பங்கேற்று ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். நூல் வெளியீடுகள், சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.