உள்ளூர் செய்திகள்

திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

கம்பம்: திராட்சை சாகுபடி முறைகள் குறித்து பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி வேளாண் மாணவிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் திராட்சை ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சி நிலையத்தில் பள்ளி மாணவர்கள் பயிற்சி பெறுவர். பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேளாண் தொழிற்கல்வியாக எடுத்து படிக்கும் மாணவிகளுக்கு திராட்சை சாகுபடி பயிற்சிக்கு வேளாண் ஆசிரியர்கள் ராமமூர்த்தி, மாரிதேவி தலைமையில் மாணவர்கள்பயிற்சிக்கு வந்தனர்.மாணவர்களுக்கு பசுமைகுடிலில் வளர்க்கப்படும் திராட்சை கொடிகள், ஒட்டு கட்டுவது, நவீன தொழில்நுட்பங்கள், இனிப்பு தன்மை எந்தளவிற்கு இருக்க வேண்டும், சாப்பிடும் ரகங்கள், ஒயின் தயாரிப்பு ரகங்கள், சீதோஷ்ண நிலை, மண்வளம், தேவைப்படும் மழை, தாக்கும் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் பேராசிரியர் சுப்பையா விளக்கினார். ஒரு வாரம் நடைபெறும் பயிற்சியின் நிறைவில் மாணவ, மாணவிகளுக்கு ஆராய்ச்சி நிலையம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.இந்த பயிற்சியின் போது ஆராய்ச்சி நிலைய மேலாளர் முருகன் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்