வாசிப்பால் சமூகத்தை நேசிக்கலாம்! புத்தக திருவிழாவில் பேச்சு
அன்னுார்: புளியம்பட்டி, நகராட்சி மண்டபத்தில், 10ம் ஆண்டு புத்தக திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. 20 பதிப்பகங்களின் பல லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் மாலை கருத்தரங்கம் நடந்தது. இதில் எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசுகையில், வாசிப்பால் சமூக அக்கறை ஏற்படும். எண்ணம் விசாலமாகும். உதவும் எண்ணம் உருவாகும். புதிய சிந்தனைகள் ஏற்படும்.சாதித்தவர்கள் எல்லாம் வாசித்தவர்களே என்றார். வரித்துறை கூடுதல் ஆணையாளர், கவிஞர் தேவேந்திர பூபதி புத்தகங்கள் குறித்தும், வாசிப்பு குறித்தும் பேசினார். ஊட்டி மலைச்சொல் இலக்கிய சமூக மைய நிறுவனர் பாலநந்தகுமார், விடியல் அமைப்பின் செயலாளர் ஜெயகாந்தன், விடியல் இயக்குனர் தர்மராசு உள்பட பலர் பங்கேற்றனர்.