உள்ளூர் செய்திகள்

விடுதலைப் போராட்ட வீரர்களை மாணவர்கள் படிக்க வேண்டும்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், குழந்தைகள் தினவிழா முன்னிட்டு முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்​ சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.முதுகுளத்துார் வட்ட சட்ட பணி குழு தலைவர் சார்பு நீதிபதி ராஜகுமார் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜோசப் விக்டோரியா ராணி முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.சார்பு நீதிபதி ராஜகுமார் பேசியதாவது: மாணவர்கள் நல்ல காரியம் செய்ய தயக்கம் காட்டக் கூடாது. மாணவர்கள் ஆசிரியர் கூறும் நல்ல விஷயங்களை தயக்கமில்லாமல் செய்ய வேண்டும். மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் குறித்த பிரச்னைகளை தயக்கமின்றி பெற்றோர், ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி படிக்க வேண்டும் என்றார். சட்ட தன்னார்வலர் அடைக்கலமேரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்