உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலையில் உலக மண் தின விழா

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை, இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை சார்பில், உலக மண் தினம் பல்கலை அரங்கில் கொண்டாடப்பட்டது. முன்னதாக, மண்வளம் பாதுகாப்பை வலியுறுத்தி, மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்தார்.தொடர்ந்து நடந்த கருத்தரங்கில், மண்வளம் மற்றும் பயிர் தேவைக்கு உரமிடுதல், புவியியல் தகவல் தொழில்நுட்பங்களை மண்ணியல் துறைக்கு பயன்படுத்துதல், மழை நீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து வல்லுநர்கள் விளக்கமளித்தனர்.இதில், கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி பழனிசாமி, பயிர் மற்றும் மண் வள மேலாண்மையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.இதில், பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன், இயக்குனர் பாலசுப்பிரமணியம், மண்ணியல் துறை பேராசிரியர் மரகதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்