ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவருக்கு சாகித்ய அகாடமி விருது
ஈரோடு: மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழில் நீர் வழிபடூஉம் நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்த இவரது இயற்பெயர் ராஜசேகரன். 40 ஆண்டுகளாக எழுதி வருகிறார். நிழலின் தனிமை இவரது சிறந்த நாவலாகும். அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல் உள்ளிட்ட பல படைப்புகளை படைத்துள்ளார்.ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர் பிறகு முழுநேர படைப்பாளியாக ஆனார். அவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு எழுத்தாளர் வண்ணதாசன் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.