உள்ளூர் செய்திகள்

இளம் வடிவமைப்பாளர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்

நாமக்கல்: மாநில அளவிலான சிறந்த, இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு, தகுதியானவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு, இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களிடம் இருந்து சிறந்த வடிவமைப்புகளை போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்ய ஏதுவாக, மாநில அளவிலான சிறந்த, இளம் வடிவமைப்பாளர் விருது வழங்குகிறது. அதற்கான சிறந்த வடிவமைப்புகளை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வடிவமைப்பாளர்களில், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு முறையே, ஒரு லட்சம் ரூபாய், 75,000 ரூபாய், 50,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும். விருதுக்கான வழிகாட்டுதல்கள், வடிவமைப்பு நுழைவு படிவம், தகுதிகள், தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் வடிவமைப்பை அனுப்ப வேண்டிய முகவரி விபரங்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் காணலாம்.வடிவமைப்புகளை சமர்ப்பிக்க கடைசி தேதி, டிச., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான சிறந்த வடிவமைப்புகளை தேர்ந்தெடுப்பதில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள், வடிவமைப்புகளை, வரும் டிச., 31க்குள், உதவி இயக்குனர், உதவி இயக்குனர் அலுவலகம், கைத்தறி துறை, (திருச்செங்கோடு சரகம்), ஈ.காட்டூர், எலந்தகுட்டை அஞ்சல்-638008 என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு, 97500 44550 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்