உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கான பரிசு தொகை திட்டம் மீண்டும் அமல்

புதுச்சேரி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கான பரிசு தொகை திட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் மண்டல அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கும், தனி பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தை புதிய விதிமுறைகளோடு மீண்டும் துவக்க பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பள்ளி கல்வித் துறை கோப்பிற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.மாநிலத்தில் மண்டல அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு முறையே, ரூ. 20,000, ரூ.15,000, ரூ.10,000 பரிசு, தனி பாடங்களில் 100 மதிப்பெண் பெறுவோருக்கு தலா ரூ. 5,000 பரிசு வழங்கப்படும். இந்தத் திட்டம் 2023-24ம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்படும்.இத்தகவலை கவர்னர் மாளிகை செயலகம் தெரிவித்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்