இளநிலை உதவியாளர்கள் குழு நிர்வாகிகள், சி.இ.ஓ.,விடம் மனு
விழுப்புரம்: தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை இளநிலை உதவியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள், விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் மனு அளித்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம், குழு ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், மணிகண்டன், ஜெயமதி, பாரதிராஜா உட்பட நிர்வாகிகள் பலர் அளித்த மனுவில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நேரடி உதவியாளர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.இளநிலை உதவியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு பெற்று வழங்குதல், இளநிலை உதவியாளர்களுக்கு ஓராண்டில் பணிவரன் ஆணை வழங்குவதோடு, குறிப்பிட்ட காலத்தில் பயிற்சி அளிக்க வேண்டும். பின் 2 ஆண்டுகள் பணிநிறைவு பெற்றோருக்கு தகுதிக்காண பருவம் முடித்ததற்கான ஆணையை நியமன அலுவலரான முதன்மை கல்வி அலுவலர் நிலையிலே ஆணை பிறப்பிக்க அதிகாரிகள் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.