மாணவியர் மனது வைத்தால் குழந்தை திருமணம் தடுக்கலாம்
தங்கவயல்: மாணவியர் மனது வைத்தால் குழந்தைகள் திருமணங்களை தடுத்து நிறுத்த முடியும், என்று கோலார் ஜில்லா பஞ்சாயத்து தலைமை செயலர் பத்மா பசந்தப்பா தெரிவித்தார்.குழந்தைகள் திருமண தடுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி அடையவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி, தங்கவயல் சாம்பியன் ரீப் பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. பல்வேறு உயர்நிலைப் பள்ளி மாணவியர் பங்கேற்றனர்.1098 தொலைபேசி எண்கோலார் மாவட்ட ஜில்லா பஞ்சாயத்து தலைமை செயலர் பத்மா பசந்தப்பா பேசியதாவது:பெண்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள திருமண வயது 19. எனவே எஸ்.எஸ்.எல்.சி., படித்து வரும் மாணவியர், இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன் கூட்டியே திருமணம் செய்துக் கொள்ள கூடாது. சட்டத்துக்கு விரோதமானது. 19 வயதுக்கு முன்னதாக திருமணம் செய்ய கட்டாயப் படுத்தினால், சஹாய வாணி- 1098 எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். போலீசுக்கும் தகவல் கொடுங்கள்.சஹாய வாணிகுழந்தைகள் திருமணத்தை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இருந்த போதிலும், சில இடங்களில் குழந்தைகள் திருமணம் நடந்து வருகிறது. மாணவியர் மனது வைத்தால், நிச்சயம் குழந்தைகள் திருமணத்தை தடுத்து நிறுத்த முடியும்.சிறுமியர் நலனுக்காகவே புதியதாக சஹாய வாணி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் கோலார் மாவட்டம் முதலிடம் பிடிக்க வேண்டும். இதனால் மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். இதில் நீங்கள் அனைவரும் வெற்றி அடைய வேண்டும். இதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.தேர்வில் வெற்றிதங்கவயல் வட்டார கல்வி அதிகாரி முனி வெங்கட் ராமாச்சாரி பேசுகையில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தங்கவயல் முதலிடம் வர வேண்டும் என்று ஆசிரியர்களிடமும் விளக்கி, அதற்கான வழிகாட்டுதல்களை விளக்கி இருக்கிறோம். மாணவர்களும் நன்றாக படித்து தேர்ச்சி அடைய வேண்டும். தங்கவயல் வட்டார கல்வித்துறைக்கு சிறந்த பெயரை பெற்று தரவேண்டும், என்றார்.டாக்டர் அம்பேத்கர் உயர்நிலைப் பள்ளி, செயின்ட் ஜோசப் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, பி.ஜி.எம்.எல்., உயர்நிலைப் பள்ளி, உரிகம் பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும் மாணவியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.