உள்ளூர் செய்திகள்

கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஷிவமோகாவில் மாணவர்கள் பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யும் படி கட்டாயப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்னர், கர்நாடகாடவில் மொரார்ஜி தேசாய் குடியிருப்புப் பள்ளியில் படிக்கும் ஐந்து மாணவர்கள் செப்டிக் டேங்க்கில் இறங்கி வெறும் கைகளால் சுத்தம் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளியின் முதல்வர், ஆசிரியர் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநில கல்வி அமைச்சர் மது பங்காரப்பா இனி இதுபோல் சம்பவம் நடக்காது. தற்போது பள்ளி மாணவர்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இந்நிலையில் அமைச்சர் மது பங்காரப்பாவின் சொந்த மாவட்டம் ஷிவமோகாவில் மாணவர்கள் பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் மாணவர் ஒருவர் தண்ணீர் ஊற்றுகிறார். இதையடுத்து மற்ற மாணவர்கள் தேய்த்து சுத்தம் செய்கின்றனர். இதற்கு மாணவர்கள் பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யும் படி கட்டாயப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் தென் மாநிலத்தில் இதுபோன்று பள்ளி கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் சம்பவம் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்