பி.யு.சி., முதலாம் ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
பெங்களூரு: பி.யு.சி., முதலாம் ஆண்டு தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. பிப்ரவரி 13ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன.கர்நாடகா பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம், பி.யு.சி., முதலாம் ஆண்டு தேர்வுக்கான அட்டவணையை, நேற்று வெளியிட்டது. பிப்ரவரி 13ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை, தேர்வுகள் நடக்கிறது.இதன்படி பிப்ரவரி 13ல் கன்னடம், அரபி மொழி தேர்வு; 14 ல் ஹிந்தி; 15ல் அரசியல் அறிவியல்; 16 ல் தகவல் தொழில்நுட்பம், அழகு மற்றும் ஆரோக்கியம்; 17ல் கணிதம், புவியியல்; 19ல் வரலாறு; பிப்., 20ல் தமிழ், மலையாளம், உருது, சமஸ்கிருதம்; 21 ல் உளவியல், வேதியியல், அடிப்படை கணிதம்; 22 ல் வணிகவியல்; 23 ல் கல்வி சட்டம்; 24 ல் பொருளாதாரம்; 26 ல் சமூகவியல், கணினி அறிவியல்; 27 ல் ஆங்கிலம்; 28 ல் உயிரியல் தேர்வுகள் நடக்க உள்ளன.அனைத்து தேர்வுகளும் காலை 10:15 மணிக்கு துவங்கி மதியம் 1:30 மணி வரை நடக்கின்றன.