உள்ளூர் செய்திகள்

மருத்துவ கல்லுாரி கட்ட பெங்., மாநகராட்சி முடிவு

பெங்களூரு: பள்ளி, கல்லுாரிகளை நடத்தி வரும் பெங்களூரு மாநகராட்சி, 500 கோடி ரூபாய் செலவில், மருத்துவக் கல்லுாரி அமைக்க திட்டமிட்டு உள்ளது.பெங்களூரு மாநகராட்சி சார்பில் பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன. இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி வரலாற்றில், முழுதுமாக மாநகராட்சிக்குச் சொந்தமான மருத்துவக் கல்லுாரி கட்ட உத்தேசித்திருப்பது இதுவே முதன் முறை.இதுதொடர்பாக, 2024 - 25 மாநில பட்ஜெட்டில், 500 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். இதற்காக, கோவிந்தராஜ் சட்டசபை தொகுதியில் எம்.சி., லே - அவுட்டில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையை, மருத்துவக் கல்லுாரியாக மாற்ற அரசுக்கு, மாநகராட்சி அறிக்கை அனுப்பி உள்ளது.அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், மாநிலத்தில் முதன் முறையாக, உள்ளாட்சி அமைப்பு மூலம் மருத்துவக் கல்லுாரி அமைக்கப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார சேவை வழங்குவது மட்டுமின்றி, மாநகராட்சியின் மருத்துவ முறையும் உயர் தொழில்நுட்பமாக மாற்றப்படுகிறது.மருத்துவ விதிகளின்படி, ஒரு மருத்துவக் கல்லுாரி கட்டுவதற்கு 500 படுக்கைகள் கொண்டதாக இருக்க வேண்டும். ஏற்கனவே, எம்.சி., லே - அவுட்டில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில், 300 படுக்கைகள் உள்ளன. அதே மருத்துவமனை, உயர் தொழில்நுட்பம் அமைத்து, படுக்கை வசதிகள் அதிகரித்து, மருத்துவக் கல்லுாரியாகமாற்றப்படும்.இம்முறை மாநில பட்ஜெட்டில், மருத்துவக் கல்லுாரி கட்ட நிதி ஒதுக்க கேட்கப்படும். ஏழை குழந்தைகளின் மருத்துவக் கல்விக்காக புதிய மருத்துவக் கல்லுாரி கட்டப்படுவதாக மாநகராட்சி கூறுகிறது. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டால், அடுத்தாண்டு மாநகராட்சி மூலம் மருத்துவக் கல்லுாரி நிறுவப்படும் என கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்