உள்ளூர் செய்திகள்

கட்டடம் இல்லை: இடநெருக்கடியில் படிக்கும் மாணவர்கள் பாதிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைபள்ளி, வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் 1500 மாணவர்கள் வரை படிக்கின்றனர். இங்கு பயன்பாட்டில் இருந்த சேதமடைந்த வகுப்பறை கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் போதிய இடவசதியின்றி ஒருவகுப்பறையை இரண்டாக பிரித்து மாணவர்களை அமர வைத்துள்ளனர். மேலும் ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால், மரத்தடி நிழலில் மாணவர்களை அமரவைத்து பாடம் நடத்துகின்றனர். பலத்த காற்று, அதிக வெயிலின்போது ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்