உள்ளூர் செய்திகள்

கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

சென்னை: சாகித்ய அகாடமியின் சார்பில் வழங்கப்படும், சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது, கருங்குன்றம்&' என்ற நுாலை மொழிபெயர்த்த, கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சாகித்ய அகாடமியின் செயற்குழு கூட்டம், டில்லியில் உள்ள ரபீந்தர பவனில் நேற்று நடந்தது. இதில், கடந்தாண்டு சிறந்த முறையில் மொழி பெயர்க்கப்பட்ட நுால்களின் பட்டியல் தேர்வாளர்களால் வழங்கப்பட்டது.பரிசீலனைக்கு பின், விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட நுால்கள் மற்றும் 24 மொழி பெயர்ப்பாளர்களின் பட்டியலை, சாகித்ய அகாடமியின் செயலர் சீனிவாசராவ் அறிவித்தார். அதாவது, அசாமி, வங்கமொழி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, தமிழ் உள்ளிட்டவற்றில் மொழி பெயர்க்கப்பட்ட நுால்கள் மற்றும் நுாலாசிரியர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.நுாலாசிரியர்களுக்கு, 50,000 ரூபாய் ரொக்கமும், செப்பு பட்டயமும், இந்தாண்டில் நடக்க உள்ள நிகழ்வில் வழங்கப்பட உள்ளது.மமாங் தய் என்பவர் ஆங்கிலத்தில், தி பிளாக் ஹில் என்ற தலைப்பில் எழுதிய நாவலை, கருங்குன்றம் என்ற தலைப்பில், தமிழில் மொழி பெயர்த்த கண்ணய்யன் தட்சிணாமூர்த்தியும், சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களில் ஒருவர். இந்த நுாலை ஜெயா தேவதாஸ், குளச்சல் யூசூப் எனும் எஸ்.முகமது யூசூப், செல்வராஜ் என்ற, குறிஞ்சிவேலன் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு தேர்வு செய்தது.அருணாசல பிரதேசம் வழியாக திபெத்திற்கு செல்ல முயற்சிக்கும், ஒரு பிரெஞ்சு பாதிரியாரின் அனுபவத்தையும், ஒரு செழுமையான பழங்குடி பண்பாட்டையும் எடுத்துச்சொல்லும் நாவலாக, ஆங்கிலத்தில், மமங் தாய் என்பவர், தி பிளாக் ஹில் என்ற பெயரில் எழுதி இருந்தார். அதையே, கண்ணையன் தட்சிணாமூர்த்தி தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.அதாவது, இந்திய மொழி, மரபு சார்ந்த சமூகங்களின் மீது தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்தும் முயற்சிக்காக, கிறிஸ்துவ பாதிரியார்கள்படும் அவமானங்களையும், பழங்குடியின மக்களின் நம்பிக்கை, கலாசாரம் சார்ந்த விஷயங்களையும் நாவல்விவரிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்