மாணவர்களுக்கு குட்கா விற்ற மூன்று பேர் கைது
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வத்திராயிருப்பு எஸ்.ஐ. போத்தி, போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் காரில் வைத்து பள்ளி மாணவர்களுக்கு குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த முனியசாமி 52, தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை சேர்ந்த சையது சுல்தான் 51, தம்பிபட்டி நடுத்தெருவை சேர்ந்த மகாலிங்கம் 57, ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்த 61 கிலோ குட்கா பொருட்களையும், விற்பனைக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.