உள்ளூர் செய்திகள்

அரசு கல்லுாரிகளில் இடங்களை அதிகரிக்க வலியுறுத்தல்

சென்னை: அரசு கல்லுாரிகளில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் சேர, இதுவரை 1.81 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வரும் 20 வரை விண்ணப்பிக்க முடியும் என்பதால், எண்ணிக்கை 3.5 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு கல்லுாரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.அரசு கல்லுாரிகளில், 140 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1.07 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. ஆனால், ஆண்டுதோறும் 3.5 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு கல்லுாரிகளில் இடம் மறுக்கப்பட்டால், அவர்களால் உயர் கல்வி கற்க முடியாது.எனவே, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்