உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழக அரசு செய்தித் துறையின் கீழ், எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல் உள்ளிட்ட பிரிவுகளில், பட்டப்படிப்புகள் உள்ளன.இவற்றில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, வரும் 27ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, விண்ணப்பங்களை பதிவிறக்க ஜூன் 5; விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்