உள்ளூர் செய்திகள்

மருத்துவ மாணவர் திறன் வழிகாட்டுனர் திட்டம் துவக்கம்

சென்னை: மருத்துவ மாணவர்களுக்கான திறன் வழிகாட்டுனர் சிறப்பு திட்டம், சென்னை மருத்துவ கல்லுாரியில் துவங்கப்பட்டுள்ளது.சென்னை மருத்துவ கல்லுாரியில், 250 எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கும், தனித்தனியே ஒரு பேராசிரியர் அல்லது உதவி பேராசிரியர் வழிகாட்டுனராக நியமிக்கும், திறன் வழிகாட்டுனர் சிறப்பு திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாணவர்களின் குறைகள், கருத்துகள், எதிர்பார்ப்புகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யவும், பூர்த்தி செய்யவும் உள்ளனர். இத்திட்டத்திற்கான அறிமுக விழாவில், மாணவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, பேராசிரியர்களுடன் நேற்று கலந்துரையாடினர்.இதுகுறித்து, மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது:மருத்துவ மாணவர்களின் மன நலனை உறுதி செய்வதற்கான பல்வேறு நல திட்டங்கள் முன்னெக்கப்படுகின்றன. அதன்படி, மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனைகளும், குறைதீர்ப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.வகுப்புக்கு முறையாக மாணவர்கள் வரவில்லையென்றால், மாணவர்களின் வழிகாட்டுனர் நேரடியாக விசாரித்து பிரச்னைக்கு தீர்வு காண்பர். மேலும், துறை சார்ந்த திறனை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்படும்.சென்னை மருத்துவ கல்லுாரியின் முயற்சிக்கு பல மாணவர்களும், நம்பிக்கையும், உத்வேகத்தையும் தருவர் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்