உள்ளூர் செய்திகள்

கருணாநிதி எழுதிய ராமானுஜர் தொடர் நுாலாக்கம் வெளியீடு

சென்னை: வைணவ சமய முன்னோடியாக திகழ்ந்தவர் ராமானுஜர். இவரது வரலாற்றையும், ஹிந்து மதத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் எடுத்துக்கூறும் விதமாக, ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான் என்ற தொலைக்காட்சி தொடரை, கருணாநிதி எழுதினார்.இது, 433 அத்தியாயங்களாக ஒளிபரப்பானது. இதை அனைவரும் அறிந்து கொள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப் பிரிவு, ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான் என்ற தலைப்பில் நுாலாக்கம் செய்தது. இந்நுாலை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.அறநிலையத்துறை ஆலோசனை குழு உறுப்பினர் சுகி.சிவம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, பல்வேறு ஜீயர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்