உள்ளூர் செய்திகள்

மாணவர் விடுதி, பள்ளிகளுக்கு தரமான அரிசி வினியோகம்

கோலார்: மாணவர் விடுதி மற்றும் பள்ளிகளுக்கு, தரமான அரிசி வினியோகிக்கப்படுகிறது. தரமற்ற அரிசி வழங்கவில்லை, என உணவுத்துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.கோலாரில் நேற்று அவர் கூறியதாவது:கர்நாடகா முழுதும், பள்ளிகளுக்கும், மாணவர் விடுதிகளுக்கும் தரமான அரிசி வழங்கப்படுகிறது. இது குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினால், சரியான பதில் அளிப்பேன். முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும், மாநில வளர்ச்சியில் ஆர்வம் காண்பிக்கின்றனர். மக்களுக்காக செயல்படுத்திய வாக்குறுதி திட்டங்கள் தொடரும். உணவுத்துறை வேறு மாநிலங்களில் இருந்து, அரிசி கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. தரமான அரிசியே அனைத்து இடங்களுக்கும் வழங்கப்படுகிறது. மாநிலம் முழுதும் வாக்குறுதி திட்டங்கள் செயல்படுவது, வளர்ச்சி பணிகள் நடப்பதை சகிக்க முடியாமல், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு குறித்து, விசாரணை நடக்கிறது. முதல்வர் சித்தராமையாவுக்கு, எந்த முறைகேட்டிலும் தொடர்பு இல்லை. அவர் வளர்ச்சிக்காக உழைப்பவர். மாநில மக்கள் சிறப்பாக பணியாற்றுகிறது. வளர்ச்சி பணிகள் குறித்து, மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்