உள்ளூர் செய்திகள்

விவசாயி மகளுக்கு விருதுநகர் மருத்துவ கல்லுாரியில் சீட்

திருச்சுழி: திருச்சுழி அருகே மயிலி இலுப்பை குளத்தைச் சேர்ந்த ஸ்வேதா, 18,நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று விருதுநகர் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்தது.திருச்சுழி அருகே மயிலி இலுப்பை குளத்தைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து - பரமேஸ்வரி தம்பதியின் மகள் ஸ்வேதா, 18, இவர் திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். பஸ் வசதி இல்லாததால் கிராமத்தில் இருந்து மெயின் ரோட்டிற்கு 3 கி.மீ., நடந்து வந்து பஸ் ஏறி வந்து படித்தார்.பிளஸ் 2 தேர்வில் வில் 600க்கு, 555 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். இவர் நீட் தேர்வு எழுதுவதற்காக தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நன்கு படித்து நீட் தேர்வை எழுதி, அதில் 720க்கு 531 மதிப்பெண்கள் பெற்று தேர்வானார்.பின்னர் சென்னையில் நடந்த கலந்தாய்வில் கலந்துகொண்டு இவருக்கு விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க சீட் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்