உள்ளூர் செய்திகள்

பயிற்சி வகுப்புக்கு செல்வது தவறு: இன்போசிஸ் நாராயணமூர்த்தி

புதுடில்லி: தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புவது என்பது தவறான செயல் என இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் பேசியதாவது: பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பெரும்பாலான மாணவர்கள், பள்ளியில் ஆசிரியரை கவனித்திருக்க மாட்டார்கள். பெற்றோர் ஆகிய நாமும் குழந்தைகளின் கல்விக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே இதற்கு ஒரே தீர்வாக பயிற்சி மையங்கள் உள்ளன. தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி மையங்கள் சிறந்த வழிமுறையாக இருக்காது. வழக்கமான பள்ளி வகுப்புகளை கவனிக்க தவறியவர்களில் பெரும்பாலானவர்கள் தான் அங்கு செல்கின்றனர்.உலக தரத்திலான கற்றல் முறை நமது மாணவர்களுக்கு கிடைப்பது முக்கியம். எப்படி கற்றுக் கொள்வது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்வதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்