உள்ளூர் செய்திகள்

சிறந்த உலகை உருவாக்க மாணவிகளுக்கு அறிவுரை

கோவை: ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில், சிறந்த உலகை உருவாக்குவோம் என்ற, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, கலையரங்கில் நேற்று நடந்தது.எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளைமுதன்மை நிர்வாக அலுவலர் ஸ்வாதி ரோஹித் தலைமை வகித்து நிகழ்வுகளை துவக்கிவைத்தார். நிகழ்வில், புனே இந்திரா குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் ஸ்ரீ சாணக்யா கல்விக்குழுமங்களின் தலைமை நிர்வாக அறங்காவலர் தரிதாசங்கருக்கு, கல்வி வளர்ச்சிக்கான முன்னோடி என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.அவர் பேசுகையில், கல்விதான் வளர்ச்சிக்கான அடிப்படை. கல்வியால் மட்டுமே அறிவுசார்ந்த சமூகத்தை உருவாக்க முடியும்.சமூகத்திலும், குடும்பத்திலும் பெண்களின் பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்றார்.நிகழ்வில், கல்லுாரி செயலர் சிவக்குமார், மகளிர் மேம்பாட்டு மைய தலைவர் கவிதா, செயலாளர் ரேகா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்