உள்ளூர் செய்திகள்

டாக்டர்களுக்கு பழைய பாடம்தான் அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி

சென்னை: தேசிய மருத்துவ ஆணையம், எம்.பி.பி.எஸ்., பாடத்திட்ட வழிமுறைகளை சமீபத்தில் வெளியிட்டது.அதன்படி, எம்.பி.பி.எஸ்., முடித்து, முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு, தற்போதைய நடைமுறையில் உள்ள, நீட் தேர்வுக்கு பதிலாக, நான்கரை ஆண்டில், நெக்ஸ்ட் 1 தேர்வு; ஓராண்டு பயிற்சிக்கு பின், நெக்ஸ்ட் 2 தேர்வு எழுதுவது கட்டாயம்.ஆங்கிலத்துடன் இணைந்து, இருமொழி கல்வியாக தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் மருத்துவம் படிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நெக்ஸ்ட் தேர்வு முறை, இந்த கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.நெக்ஸ்ட் தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சென்னையில் அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், இந்தாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள், அக்டோபரில் துவங்கும். எம்.பி.பி.எஸ்., பாடத்திட்டத்தை பொருத்தவரை, தமிழகத்தில் பழைய பாடத்திட்டமே தொடரும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்