உள்ளூர் செய்திகள்

அறிவியல் கருத்தரங்கில் பயனுள்ள தகவல்கள் பரிமாற்றம்

கோத்தகிரி: கோத்தகிரி தனியார் கல்லுாரியில் அறிவியல் கருத்தரங்கு நடந்தது.கல்லுாரி முதல்வர் முனைவர் பிரதீப் குமார் தலைமை வகித்தார். கூடலுார் அத்திக்குன்னா பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானி அசோக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை மேம்பட நிபுணத்துவம் தேவை. உலகில் உள்ள மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னை என்பது குப்பைகளை எவ்வாறு பயனுள்ள பொருட்களாக மாற்றுவது என்பது தான். குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, திரவ கழிவில் இருந்து பூஞ்சைகளை பயன்படுத்தி ஹைட்ரஜனை பிரித்தெடுத்து, அதன் மூலம், எரிசக்தி தயாரிப்பது அவசியம். மாணவர்கள் முயன்றால், முடியாதது எதுவும் இல்லை, என்றார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ராஜூ பேசுகையில், சமுதாயத்தில் அறிவியல் விழிப்புணர்வை கொண்டு செல்லும்போது, பல மூடநம்பிக்கைகள் தடை கல்லாக உள்ளது. நாட்டில் போலி அறிவியல் தலை விரித்தாடி வருகிறது. இந்த மாயச் சூழலில் மாணவர்கள் சிக்கிக் கொள்ளாமல், அறிவியல் மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும், என்றார். நாட்டு நலப்படுத்திட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகு வரவேற்றார். விரிவுரையாளர் பிரதீப் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்