மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு
புதுச்சேரி: பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் பயின்று மருத்துவ படிப்பில் சேர்ந்த 31 மாணவர்களை பள்ளி நிர்வாகம் பாராட்டி, கவுரவித்தது.புதுச்சேரி, பெத்திசெமினார் பள்ளியில், கடந்த 2023 -24ம் ஆண்டு, பிளஸ் 2 பயின்ற மாணவர்களில் பலர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் 31 பேர் ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சேர்ந்துள்ளனர்.அவர்களுக்கான பாராட்டு விழா நேற்று பள்ளி வளாகதில் நடந்தது. பள்ளி முதல்வர் தேவதாஸ் தலைமை தாங்கினார். தொடர்ந்து, 31 மாணவர்களை பாராட்டி, அவர்களுக்கு, ஸ்டெத்தாஸ்கோப் வழங்கி கவுரவித்தார்.நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.