உள்ளூர் செய்திகள்

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் சோதனை வெற்றி

திருநெல்வேலி: மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை 200 வினாடிகள் வெற்றிகரமாக நடந்தது.திருநெல்வேலி மாவட்டம் மகேந்திர கிரியில் இஸ்ரோ மையம் செயல்படுகிறது. விண்ணில் செலுத்தும் ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் உள்ளிட்ட இன்ஜின்கள் இங்கு சோதனை செய்யப்படுகிறது. ஜி. எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் இன்ஜின் ஏ 18 முதல் கட்ட சோதனை நேற்று நடந்தது. 200 வினாடிகள் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கியது. நிகழ்வில் இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்