உள்ளூர் செய்திகள்

அறிவுசார் மைய நேரத்தை நீட்டிக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி : நுாலகம் மற்றும் அறிவுசார் மைய நேரத்தை நீடிக்க வேண்டும் என போட்டித்தேர்வர்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் போட்டித்தேர்வர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சியில் போட்டித்தேர்வுக்கு தயாராவோர், நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தை பயன்படுத்தி வருகிறோம். பொள்ளாச்சியில் இருந்த மைய நுாலக கட்டடம் இடிக்கப்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கட்டடத்தில் செயல்படுகிறது. அந்த இடம் போதுமானதாக இல்லாததால், அறிவு சார் மையத்தையே பலரும் பயன்படுத்தி வருகிறோம்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த போட்டித்தேர்வுக்கு தயாராவோர், இந்த நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்துக்கு தான் வருகின்றனர்.தற்போது, காலை, 9:00 முதல் மாலை, 5:30 மணி வரை செயல்படும் நுாலக நேரத்தை, காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நீடிக்க வேண்டும். இதன் வாயிலாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், போட்டித்தேர்வுக்காக தயாராகும் மாணவர்கள் பயன்பெற முடியும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்