முதல்வர் திறனாய்வு தேர்வு; முடிவு இன்று வெளியீடு
சேலம்: அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர்களின் திறனை ஊக்குவிக்க, தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு, கடந்த ஆக., 8ல் நடந்தது. சேலம் மாவட்டத்தில், 3,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதினர்.இதில் தேர்வாகும் மாணவ, மாணவியருக்கு பட்டப்படிப்பு முடியும் வரை, 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதற்கு தேர்வானவர்களின் பட்டியல், தேர்வு மதிப்பெண் உள்ளிட்ட முடிவுகள், இன்று அரசு தேர்வு இணையதளத்தில் வெளியாகின்றன.