உள்ளூர் செய்திகள்

தனியார் நர்சரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

புதுடில்லி: புதுடில்லியில் உள்ள தனியார் நர்சரி பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது.தேசிய தலைநகரில் 1,741 தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் நர்சரி, மழலையர், 1ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது. மாணவர் சேர்க்கை தொடர்பாக மாநில கல்வித்துறை கடந்த 12ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர், பெண் குழந்தைகள், ஒரே பெண் குழந்தை, ஒற்றை பெற்றோர் உள்ள குழந்தை உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான அளவுகோல்களை கல்வித்துறை வகுத்துள்ளது.மேலும் வரும் மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, நர்சரியில் சேர்வதற்கு குறைந்தது மூன்று வயதும், கேஜிக்கு நான்கு வயதும், 1ம் வகுப்புக்கு ஐந்து வயதும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.முதல் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 1ம் தேதி 5.5 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு ஜனவரி 18 முதல் 27ம் தேதி வரை பள்ளி நிர்வாகத்தை பெற்றோர் அணுகி தீர்த்துக் கொள்ளலாம்.மாணவர் சேர்க்கை செயல்முறையை வரும் டிசம்பர் 20ம் தேதிக்குள் நிறைவு செய்யும்படி பள்ளி நிர்வாகங்களை கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. பொது மாணவர் சேர்க்கை பட்டியல் வரும் ஜனவரி 17ம் தேதி வெளியிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்