ஆஸ்டர் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் தொடர்பான மாநாடு
நாகவாரா: பெங்களூரு ஆஸ்டர் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் தொடர்பான மாநாடு, நாகவாராவில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடந்தது.நிறுவன தலைவர் ஆசாத் மூபன் பேசியதாவது:டாக்டர் ரமேஷ் நிம்மேகடா அறக்கட்டளையுடன் இணைந்து, புற்றுநோயை துல்லியமாக கண்டறியும், கேன்சர் கிரிட், ஆன்கா கலெக்ட் மென்பொருட்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன் மூலம் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில், முக்கிய பங்கு வகிக்கும். புற்றுநோய் ஆராய்ச்சியும் ஊக்கப்படுத்தப்படும்.புகழ்பெற்ற புற்றுநோயியல் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் ஒத்துழைத்து, புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை அளிக்கும் முறையை துரிதப்படுத்துகிறோம். இதன் மூலம், இந்தியாவை தன்னிரிகல்லா தலைவராக நிலைநிறுத்த வாய்ப்பு உள்ளது. ஒயிட்பீல்டில் உள்ள ஆஸ்டர் மருத்துவமனை, புற்றுநோய்க்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.துணை நிர்வாக இயக்குனர் அலிசா மூபன், இயக்குனர் ஷிபா மூபன், தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ்குமார், மருத்துவ ஆலோசனை குழு தலைவர் சோமசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.